லக்னோ மெட்ரோ ரயிலை முதல்வர் யோகி, ராஜ்நாத் சிங் துவக்கி வைத்தனர்

உத்தரபிரதேச மாநில தலைநகரான லக்னோ நகரில் மெட்ரோ ரயில் போக்குவரத்தை அதன் முதல்வர் யோகி ஆதித்யநாத்தும், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் துவக்கி வைத்தனர்.
லக்னோ மெட்ரோ ரயிலை முதல்வர் யோகி, ராஜ்நாத் சிங் துவக்கி வைத்தனர்
Published on

லக்னோ

சுமார் 8.5 கிலோ மீட்டர் தூரம் செல்லும் இந்த போக்குவரத்து வசதி சுமார் 6 ஆயிரம் கோடி ரூபாயில் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. நாடு முழுவதும் மெட்ரோ ரயில் சேவை விரிவுபடுத்தப்படும் என்று பிரதமர் மோடி கொச்சி மெட்ரோ ரயில் துவக்கத்தின்போது தெரிவித்தார். இச்சேவை காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை ஒவ்வொரு நாளும் இயக்கப்படும். இச்சேவை மாசினை குறைக்கும். பயணிகளுக்கு பணத்தையும் நேரத்தையும் மிச்சப்படுத்தும் என்று முதல்வர் ஆதித்யநாத் தெரிவித்தார்.

உத்தரபிரதேசத்தில் மேலும் ஏழு நகரங்களில் மெட்ரோ ரயில் சேவை துவங்கும் என்று கூறிய முதல்வர் உத்தரபிரதேசம் மாநிலம் முழுமைக்கும் ஒரே மெட்ரோ நிறுவனத்தை உருவாக்கும் முடிவும் எடுக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.

உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசுகையில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் மெட்ரோவுடன் துவங்கியுள்ளது என்றார். இந்த நாள் லக்னோவிற்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த உத்தரபிரதேசத்திற்கும் வரலாற்று தருணம் என்றும் இத்திட்டம் லக்னோ நகரத்திற்கு புதிய சந்தர்ப்பங்களை கொண்டு வரும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com