கள்ளக்காதல், கணவர், குழந்தைகள் கொலை... தசராவில் 11 தலையுடனான சூர்ப்பனகை உருவ பொம்மையை எரிக்க திட்டம்


கள்ளக்காதல், கணவர், குழந்தைகள் கொலை... தசராவில் 11 தலையுடனான சூர்ப்பனகை உருவ பொம்மையை எரிக்க திட்டம்
x

தசரா திருவிழாவின்போது, சூர்ப்பனகை உருவ பொம்மையை எரிப்பது என அந்த அமைப்பு முடிவு செய்துள்ளது.

இந்தூர்,

நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு விஜயதசமி கொண்டாட்டங்கள் நாடு முழுவதும் சிறப்பாக நடைபெறும். அப்போது, வட மாநிலங்களில் 10 தலை கொண்ட ராவணனின் உருவ பொம்மை எரிக்கப்படும்.

இந்நிலையில், மத்திய பிரதேசத்தின் இந்தூர் நகரில் பாவ்ருஷ் என்ற ஆண்கள் உரிமைகளுக்கான அமைப்பு இந்த முறை புதிய வடிவில் உருவ பொம்மையை எரிக்க திட்டமிட்டு உள்ளனர்.

இதன்படி, கள்ளக்காதலுக்காக கணவர்கள் மற்றும் குழந்தைகளை கொடூர கொலை செய்த பெண்கள் 11 பேரின் புகைப்படங்களுடன் கூடிய உருவ பொம்மையை உருவாக்கி அதனை எரிக்க முடிவு செய்து உள்ளனர். அவர்களில், சோனம் ரகுவன்ஷி, முஸ்கான் உள்ளிட்டோரும் அடங்குவர்.

ஷில்லாங்கிற்கு, தொழிலதிபர் ராஜா ரகுவன்ஷி மனைவி சோனமுடன் தேன் நிலவுக்கு சென்றபோது, காதலன் மற்றும் சிலருடன் கூட்டு சேர்ந்து கணவரை சோனம் கடுமையாக தாக்கி, கொடூர கொலை செய்த சம்பவம் மத்திய பிரதேசத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதேபோன்று முஸ்கான், கணவரை கொன்று நீல நிற டிரம்மில் அடைத்து வைத்த சம்பவமும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியிருந்தது. இதுபோன்ற கொடூர சம்பவங்களால், திருமணத்திற்கு பின்னான ஆண்களின் வாழ்வு பற்றிய கேள்வி நாடு முழுவதும் எழுந்தது.

அதனால், சமூகத்தில் பரவும் இதுபோன்ற வன்முறை கலாசாரம் பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் நோக்கில் தசரா திருவிழாவின்போது, சூர்ப்பனகை உருவ பொம்மையை எரிப்பது என அந்த அமைப்பு முடிவு செய்துள்ளது.

1 More update

Next Story