இந்திய கடற்படையில் ஜூலை 22-ல் இணையும் அதிநவீன போர்க்கப்பல்

போர்க்கப்பலின் வடிவமைப்பு மற்றும் கட்டுமானத்தில் 80 சதவீதம் உள்நாட்டு தொழில்நுட்பமே பயன்படுத்தப்பட்டுள்ளது.
போர்க்கப்பல் மால்வன்
Published on

புதுடெல்லி,

இந்திய கடற்படையில் புதிய நீர்மூழ்கி எதிர்ப்பு போர்க்கப்பலான ‘மால்வன்’ வரும் ஜூலை 22-ம் தேதி அதிகாரப்பூர்வமாக இணைக்கப்படுகிறது. இதுகுறித்து பாதுகாப்புத்துறை தரப்பில் கூறப்படுவதாவது:-

மால்வன்

கடற்படையில் இணைப்பு இந்திய கடற்படையின் பலத்தை அதிகரிக்கும் வகையில், அதிநவீன நீர்மூழ்கி எதிர்ப்பு போர்க்கப்பலான ‘மால்வன்’ வடிவமைக்கப்பட்டுள்ளது. இக்கப்பல் வரும் ஜூலை 22-ம் தேதி கடற்படையில் இணைக்கப்பட்டு, நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட உள்ளது.

கொச்சி

விமானப்படை தளபதி பங்கேற்பு இதற்கான பிரம்மாண்ட விழா கொச்சியில் நடைபெறுகிறது. இந்த விழாவிற்கு இந்திய விமானப்படை தலைமை தளபதி ஏர்சீப் மார்ஷல் தலைமை தாங்குகிறார். மேற்கு கடற்படை தளத்தின் தலைமை தளபதி துணை அட்மிரல் சஞ்சய் வத்சயன் முன்னிலை வகிக்கிறார். விழாவில் கடற்படை உயர் அதிகாரிகள், முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கின்றனர்.

80 சதவீதம் உள்நாட்டு தொழில்நுட்பம்

80% உள்நாட்டு தொழில்நுட்பம் மத்திய அரசின் ‘தற்சார்பு இந்தியா’ திட்டத்தின் கீழ், கொச்சின் கப்பல் கட்டுமான நிறுவனத்தால் இக்கப்பல் கட்டப்பட்டுள்ளது. இதன் வடிவமைப்பு மற்றும் கட்டுமானத்தில் 80 சதவீதம் உள்நாட்டு தொழில்நுட்பமே பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவின் வளர்ந்து வரும் கப்பல் கட்டுமான துறைக்கு இக்கப்பல் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com