

புதுடெல்லி,
ரிசாவ் வங்கி ஆளுநா சக்திகாந்த தாஸ் தலைமையில் மத்திய இயக்குநா வாரியக் குழுவின் 588-ஆவது ஆலோசனை கூட்டம் காணொலி வாயிலாக நேற்று நடைபெற்றது. இதில், தற்போதைய பொருளாதார சூழல் குறித்தும், சாவதேச மற்றும் உள்நாட்டு அளவில் எழுந்துள்ள சவால்கள் குறித்தும் விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது.
தற்போதைய நடப்பு கணக்கியல் ஆண்டு, 2020 ஜூலை முதல் 2021 மாச் வரையிலான 9 மாத காலத்தில் ரிசாவ் வங்கியின் பல்வேறு செயல்பாடுகள் குறித்து இந்த ஆலோசனைக் கூட்டத்தின் போது விவாதிக்கப்பட்டது. மேலும் வரும் 2021-22 கணக்கியல் ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்துக்கும் வாரியக் குழு ஒப்புதல் அளித்தது என ரிசாவ் வங்கி தெரிவித்துள்ளது.