ஆப்கானிஸ்தான் தலீபான்கள் கட்டுக்குள் சென்றது பாகிஸ்தானுக்கே அதிக லாபம்; ஒவைசி

ஆப்கானிஸ்தான் தலீபான் பயங்கரவாதிகளின் கட்டுக்குள் சென்றது பாகிஸ்தானுக்கே அதிக லாபம் என அசாதுதீன் ஒவைசி கூறியுள்ளார்.
ஆப்கானிஸ்தான் தலீபான்கள் கட்டுக்குள் சென்றது பாகிஸ்தானுக்கே அதிக லாபம்; ஒவைசி
Published on

ஐதராபாத்,

ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகளுக்கும் அந்த நாட்டு அரசுக்கும் இடையே நடந்து வந்த போர் முடிவுக்கு வந்துள்ளதுடன், தலீபான் பயங்கரவாதிகள் வசம் ஆட்சி அதிகாரம் சென்றுள்ளது.

இதனையடுத்து உலக நாடுகள் பலவும் ஆப்கானிஸ்தானில் இருக்கும் தங்கள் நாட்டு தூதரகங்களை காலி செய்யும் பணிகளை தொடங்கியுள்ளன. இதேபோன்று அமெரிக்கா, இந்தியா, இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகள் தங்களுடைய குடிமகன்களை வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளன.

இந்த நிலையில், ஏ.ஐ.எம்.ஐ.எம். தலைவர் அசாதுதீன் ஒவைசி கூறும்போது, ஆப்கானிஸ்தான் நாட்டை தலீபான்கள் கைப்பற்றி இருப்பதனால் பாகிஸ்தானுக்கே அதிக லாபம்.

ஆப்கானிஸ்தானின் சில பகுதிகளுக்குள் அல் கொய்தா மற்றும் டேயீஷ் பயங்கரவாத அமைப்பினர் நுழைந்துள்ளனர் என நிபுணர்கள் கூறி வருகின்றனர். ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு ஆனது இந்தியாவின் எதிரி. அந்த அமைப்பு தலீபான்களை கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளது. அவர்களை ஊதுகோலாக பயன்படுத்தி வருகிறது என்பதனையும் நினைவில் கொள்ள வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com