பயணிகளை ஏற்றாமல் சென்ற விவகாரம்: விமான நிறுவனம் மன்னிப்பு கோரியது

பெங்களூருவில் இருந்து நேற்று காலை 6.40 மணிக்கு டெல்லிக்கு ‘கோ பர்ஸ்ட்’ என்ற விமான நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் புறப்பட்டது.
பயணிகளை ஏற்றாமல் சென்ற விவகாரம்: விமான நிறுவனம் மன்னிப்பு கோரியது
Published on

பெங்களூரு,

பெங்களூருவில் இருந்து நேற்று காலை 6.40 மணிக்கு டெல்லிக்கு 'கோ பர்ஸ்ட்' என்ற விமான நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் புறப்பட்டது. ஆனால் 50-க்கும் மேற்பட்ட பயணிகள் விமானத்திற்கு வருவதற்கு முன்பே அவர்களை ஏற்றாமல் விமானம் புறப்பட்டு சென்றது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம், 'கோ பர்ஸ்ட்' விமான நிறுவனத்திடம் அறிக்கை கேட்டு உள்ளது.

இந்த நிலையில் பயணிகளை ஏற்றாமல் விமானம் சென்ற விவகாரம் தொடர்பாக 'கோ பர்ஸ்ட்' விமான நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது. மேலும் அந்த விமானத்தில் பணியில் இருந்த ஊழியர்களை பணி நீக்கம் செய்தும் விமான நிறுவனம் அதிரடி நடவடிக்கை எடுத்து உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com