கேரளா அரசு மதுபான கடைகளில் விற்பனையாளர்களாக பெண்கள்

கேரளாவில் அரசு மதுபான கடைகளில் விற்பனையாளர்களாக பெண்களையும் நியமிக்க அம்மாநில ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கேரளா அரசு மதுபான கடைகளில் விற்பனையாளர்களாக பெண்கள்
Published on

திருவனந்தபுரம்

கேரளாவில் அரசுக்கு சொந்தமான மதுபானக் கடைகளில் விற்பனையாளர்களாக ஆண்கள் மட்டுமே நியமிக்கப்பட்டு வருகின்றனர். இந்த பணியிடங்களை பெண்களுக்கும் ஒதுக்க கோரி பல பெண்கள் அமைப்புகள் கேரளா ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன.

இதனை விசாரித்த கேரளா ஐகோர்ட் அரசு மதுபான கடைகளில் பெண்களையும் விற்பனையாளர்களாக நியமிக்க உத்தரவிட்டுள்ளது. நாட்டின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான சுற்றுலா தலங்களில் முக்கியத்துவம் வாய்ந்த மேகலயாவில் பெரும்பாலான மதுபான கடைகளில் பெண்களே விற்பனையாளர்கள். அதேபோன்ற ஒரு நிலைமை கேரளாவிலும் விரைவில் வர இருக்கிறது.

அண்மையில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராதல், சபரிமலையிலும் பெண்களுக்கு அனுமதி தரலாம் என அடுத்தடுத்து அதிரடி காட்டும் அரசு மதுபான கடைளிலும் பெண்களை உட்கார வைக்கும் என்றே தெரிகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com