பள்ளி புத்தகங்களில் கவர்னரின் அதிகாரங்கள் குறித்த பாடம் இடம்பெறும் - கேரள அரசு அறிவிப்பு


பள்ளி புத்தகங்களில் கவர்னரின் அதிகாரங்கள் குறித்த பாடம் இடம்பெறும் - கேரள அரசு அறிவிப்பு
x

கோப்புப்படம் 

அரசியலமைப்பின் கீழ் கவர்னரின் அதிகாரங்கள் என்ன என்பதை சுப்ரீம் கோர்ட்டு தெளிவுபடுத்தியுள்ளது.

திருவனந்தபுரம்,

கேரளாவில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசுக்கும், புதிய கவர்னராக நியமிக்கப்பட்ட ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருக்கும் இடையே மோதல் உருவாகி உள்ளது. இந்நிலையில் கேரள கல்வி மந்திரி சிவன்குட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

ஜனநாயகம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை கற்றுக்கொள்ள குழந்தைகளுக்கு உதவுவதில் பள்ளிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. சமீப காலங்களில் கவர்னர்களை தவறாக பயன்படுத்தி தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை சீர்குலைக்கும் முயற்சிகள் அதிகரித்து வருகின்றன.

அரசியலமைப்பின் கீழ் கவர்னரின் அதிகாரங்கள் என்ன என்பதை சுப்ரீம் கோர்ட்டு தெளிவுபடுத்தியுள்ளது. மாநில கவர்னர்களின் அரசியலமைப்பு அதிகாரங்கள் மற்றும் கடமைகளை விளக்கும் பாடங்கள் திருத்தப்பட்ட பாடப்புத்தகங்களில் இடம்பெறும். உயர்நிலை பள்ளி புத்தகங்களில் வரவிருக்கும் மாற்றங்களின் ஒரு பகுதியாகவும் இது இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story