ராஜஸ்தான் இடைத்தேர்தல் பா.ஜனதா படுதோல்வி, வசுந்தரா ராஜேவை நீக்கக்கோரி போர்க்கொடி!

ராஜஸ்தான் இடைத்தேர்தலில் பாரதீய ஜனதா படுதோல்வி அடைந்ததை அடுத்து வசுந்தரா ராஜேவை நீக்க வேண்டும் என போர்க்கொடி தூக்கப்பட்டு உள்ளது.
ராஜஸ்தான் இடைத்தேர்தல் பா.ஜனதா படுதோல்வி, வசுந்தரா ராஜேவை நீக்கக்கோரி போர்க்கொடி!
Published on

ஜெய்பூர்,

ராஜஸ்தானில் அஜ்மீர், அல்வர் பாராளுமன்ற தொகுதிகள் மற்றும் மண்டல்கிரக் சட்டசபை தொகுதியில் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸிடம் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் பாரதீய ஜனதா படுதோல்வியை சந்தித்தது. படுதோல்வியை அடுத்து அம்மாநில பாரதீய ஜனதா முதல்-மந்திரி வசுந்தரா ராஜேவிற்கு பிரச்சினை எழுந்து உள்ளது. இடைத்தேர்தலில் ஆளும் கட்சி தோல்வியை தழுவிய நிலையில் அவர் பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் கூறியிருந்தது. இப்போது பாரதீய ஜனதாவிலும் அக்கோரிக்கையானது எழுந்து உள்ளது.

ராஜஸ்தான் மாநில கோடா மாவட்ட ஓ.பி.சி. பிரிவு தலைவர் அசோக் சவுத்திரி கட்சியின் தலைவர் அமித் ஷாவிற்கு எழுதி உள்ள கடிதத்தில், இடைத்தேர்தல் முடிவு கட்சிக்கு சாதகமாக வராது என்பது ஏற்கனவே என்னை போன்ற தொண்டர்களுக்கு தெரியும், மாநில மக்கள் வசுந்தரா ராஜேவின் செயல்பாட்டில் மகிழ்ச்சியடையவில்லை என கூறிஉள்ளார். தலைமையில் மாற்றம் வேண்டும் என்று வலியுறுத்தி உள்ள அவர், மாநில பாரதீய ஜனதா தலைவர் அசோக் பர்னாமியையும் கடுமையாக தாக்கி உள்ளார் என செய்தி வெளியாகி உள்ளது.

ஆனால் கோடா மாவட்ட பாரதீய ஜனதா தலைவர் கேமந்த் விஜய், முதல்-மந்திரி வசுந்தரா ராஜே மற்றும் அசோக் பர்னாமியை பாதுகாத்து உள்ளார். அசோக் சவுத்திரி கடிதத்தை தவறாக எழுதிவிட்டதாகவும் அதனை திரும்ப பெறுவதாக என்னிடம் கூறிஉள்ளார் எனவும் கேமந்த் விஜய் குறிப்பிட்டு உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com