அவசரகால பயன்பாட்டுக்கு உள்நாட்டிலேயே தயாரான கோவேக்சின் தடுப்பூசி பரிந்துரை

பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள உள்நாட்டிலேயே தயாரித்துள்ள கோவிக்சின் தடுப்பூசியை அவசரகால தேவைக்கு பயன்படுத்த அரசுக்கு நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது.
அவசரகால பயன்பாட்டுக்கு உள்நாட்டிலேயே தயாரான கோவேக்சின் தடுப்பூசி பரிந்துரை
Published on

புதுடெல்லி,

ஓராண்டுக்கு முன்பாக சீனாவின் உகான் நகரில் தோன்றி, உலகமெங்கும் ஆதிக்கம் செலுத்திவருகிற கொரோனா வைரசுக்கு எதிராக இந்தியா இன்னும் போராடுகிறது.

உலகளவில் அமெரிக்காவை தொடர்ந்து, கொரோனாவின் மோசமான கோரப்பிடியில் சிக்கியுள்ள 2-வது நாடு என்ற பெயரை இந்தியா பெற்றுள்ளது. ஆனாலும், இந்த ஓராண்டு காலத்தில் மேற்கொண்ட ஆக்கப்பூர்வமான போராட்டத்தால், கொரோனா வைரஸ் பரவல் பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. நல்ல சுகாதார கட்டமைப்புகளை கொண்டு, தரமான சிகிச்சைகள் அளிக்கப்படுவதால் உயிரிழப்புகள் குறைந்துள்ளன.

கொரோனா எனும் அரக்கனை ஒழிக்கும் போராட்டத்தின் அடுத்த கட்டமாக நாடு தடுப்பூசி போடும் பணிக்கு தயாராகிறது. இன்று தமிழகம் உள்பட நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தடுப்பூசி ஒத்திகை நடைபெற்றது.

தடுப்பூசியை பொறுத்தமட்டில் இந்தியாவில் 6 தடுப்பூசிகள் பல்வேறு கட்டத்தில் இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. அவற்றில், உள்நாட்டில் பாரத் பயோடெக் நிறுவனம், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன் இணைந்து உருவாக்கியுள்ள கோவேக்சின் தடுப்பூசி இறுதி கட்ட மருத்துவ பரிசோதனையில் உள்ளது.

இந்தநிலையில், இந்த தடுப்பூசியை அவசர காலத்தில் பயன்படுத்த (சிடிஎஸ்சிஓ) எனப்படும், இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஆணையத்திடம், சீரம் நிறுவனமும் விண்ணப்பித்தது. இதையடுத்து நேற்று அந்த அமைப்பு பரிந்துரைத்தது.

இந்நிலையில் பாரத் பயோடெக் நிறுவனம் கொரோனாவுக்கு எதிரான 'கோவேக்சின்' என்ற தடுப்பூசி மருந்தை கண்டறிந்துள்ளது. முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரித்துள்ள கோவேக்சின் தடுப்பு மருந்தினை நிபந்தனைகளுடன் அவசரகால பயன்பாட்டிற்கு பயன்படுத்திட மத்திய மருந்துகள் தர கட்டுப்பாட்டு அமைப்பு (சிடிஎஸ்சிஓ), பரிந்துரை செய்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com