'நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு இந்தியாவில் உள்நாட்டு விமான சேவை 2.5 மடங்கு அதிகரித்துள்ளது' - பா.ஜ.க. எம்.பி. நரசிம்மராவ்

உள்நாட்டு விமான பயணிகளின் எண்ணிக்கை 143 மில்லியனாக உயர்ந்துள்ளது என நரசிம்மராவ் எம்.பி. தெரிவித்தார்.
'நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு இந்தியாவில் உள்நாட்டு விமான சேவை 2.5 மடங்கு அதிகரித்துள்ளது' - பா.ஜ.க. எம்.பி. நரசிம்மராவ்
Published on

புதுடெல்லி,

இந்தியாவில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பிறகு விமான போக்குவரத்துத்துறையில் பெரிய அளவிலான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக பா.ஜ.க. மாநிலங்களவை எம்.பி. நரசிம்மராவ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது;-

"விமான போக்குவரத்து இன்று சாமானிய மனிதரும் எளிதில் அணுகக்கூடிய வகையில் உள்ளது. உலகின் 3-வது மிகப்பெரிய உள்நாட்டு விமான போக்குவரத்து சந்தையாக இந்தியா விளங்குகிறது. நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு இந்தியாவில் உள்நாட்டு விமான சேவை 2.5 மடங்கு அதிகரித்துள்ளது.

முன்பு 60 மில்லியனாக இருந்த உள்நாட்டு விமான பயணிகளின் எண்ணிக்கை தற்போது 143 மில்லியனாக உயர்ந்துள்ளது. அதேபோல், சர்வதேச விமான பயணிகளின் எண்ணிக்கை கடந்த 2014-ம் ஆண்டு 43 மில்லியனாக இருந்த நிலையில், தற்போது 64 மில்லியனாக அதிகரித்துள்ளது. நாட்டில் உள்ள விமானங்களின் எண்ணிக்கை கடந்த 9 ஆண்டுகளில் 70 முதல் 80 சதவீதம் அதிகரித்துள்ளது."

இவ்வாறு நரசிம்மராவ் எம்.பி. கூறினார். 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com