திரிபுரா தேர்தலை முன்னிட்டு இந்தியா-வங்காளதேசம் இடையிலான எல்லையில் பாதுகாப்பு அதிகரிப்பு

திரிபுரா தேர்தலை முன்னிட்டு இந்தியா-வங்காளதேசம் இடையிலான எல்லையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. #AssemblyElections
திரிபுரா தேர்தலை முன்னிட்டு இந்தியா-வங்காளதேசம் இடையிலான எல்லையில் பாதுகாப்பு அதிகரிப்பு
Published on

அகர்தலா,

திரிபுரா மாநிலத்தில் 1993ம் ஆண்டு முதல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஆட்சி நடக்கிறது. தொடர்ந்து 4வது முறையாக முதல்மந்திரியாக உள்ள மாணிக் சர்க்கார், 5வது முறையாக ஆட்சியை பிடிக்க களம் இறங்கி உள்ளார். மொத்தம் உள்ள 60 தொகுதிகளில் 59 தொகுதிகளில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஓட்டுப்பதிவு நடக்கிறது.

ஒரு தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூ. வேட்பாளர் இறந்ததால் அங்கு அடுத்த மாதம் 12ந்தேதி தேர்தல் நடக்கிறது.மொத்தம் 307 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 25 லட்சத்து 73 ஆயிரத்து 413 வாக்காளர்களுக்காக 3,214 ஓட்டுப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

சட்ட மன்ற தேர்தலை முன்னிட்டு இந்தியா- வங்காளதேசம் இடையிலான சர்வதேச எல்லையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ராணுவத்தினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com