கர்நாடக வேளாண் பல்கலைக்கழகத்தில் விவசாய பொருட்கள் கண்காட்சி; முதல் நாளில் ரூ.14¼ லட்சத்திற்கு விதைகள் விற்பனை

தார்வாரில் உள்ள கர்நாடக வேளாண் பல்கலைக்கழகத்தில் விவசாய பொருட்கள் கண்காட்சி தொடங்கியது. இதில் முதல்நாள் ரூ.14¼ லட்சத்திற்கு விதைகள் விற்பனையானது.
கர்நாடக வேளாண் பல்கலைக்கழகத்தில் விவசாய பொருட்கள் கண்காட்சி; முதல் நாளில் ரூ.14¼ லட்சத்திற்கு விதைகள் விற்பனை
Published on

உப்பள்ளி;

விவசாய பொருட்கள் கண்காட்சி

தார்வாரில் கர்நாடக வேளாண் பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தில் ஆண்டுதோறும் விவசாய பொருட்கள் கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம். இந்த விவசாய பொருட்கள் கண்காட்சியில் விவசாயிகள் விளைவித்த பொருட்கள் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டு விற்பனை செய்யப்படும். இதில் கலந்துகொள்ளும் மக்கள் ஆர்வத்துடன் விவசாய பொருட்கள், பயிர் விதைகள் வாங்கி செல்வார்கள்.

அதன்படி இந்தாண்டுக்கான(2022) விவசாய பொருட்கள் கண்காட்சி நேற்றுமுன்தினம் பல்கலைக்கழக வளாகத்தில் தொடங்கியது. இதில் ஆர்வத்துடன் பொதுமக்கள் கலந்துகொண்டு தங்களுக்கு தேவையான காய்கறிகள், பயிர் விதைகளை வாங்கி சென்றனர். ராகி, துவரை, கடலை, சோயாபீன்ஸ், பச்சை பயிறு, மக்காச்சோளம் மற்றும் பருத்தி போன்றவற்றின் விதைகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. பல்கலைக்கழக மாணவர்கள், விவசாயத்துறை அதிகாரிகள் ஆகியோர் பார்வையாளர்களுக்கு விதைகள் பற்றி விவரித்தனர்.

ரூ.14 லட்சம் விதைகள் விற்பனை

அதன்படி முதல்நாளான நேற்றுமுன்தினம் காலை முதல் மாலை வரை ஒரேநாளில் 192 குவிண்டால் பல்வேறு பயிர் விதைகள் விற்பனையாது. இதன் மொத்த மதிப்பு ரூ.14.35 லட்சம் இருக்கும்.

2-வது நாளாக நேற்றும் விவசாய பொருட்கள் கண்காட்சி நடந்தது. அனைத்து விதைகளும் விற்பனை செய்யப்பட்ட பிறகு கண்காட்சி முடிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com