நாளை அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு

இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 9-ம் தேதி வரை நடைபெறும்.
நாளை அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு
Published on

புதுடெல்லி,

பிப்ரவரி 1-ம் தேதி இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். இந்தநிலையில் நாடாளுமன்ற கூட்டத்தொடரை சுமூகமாக நடத்துவது குறித்து ஆலோசிக்க அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை மறுநாள் தொடங்கி 9-ம் தேதி வரை நடைபெறுகிறது. நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறும் அரசு முழு அளவிலான பட்ஜெட்டை தாக்கல் செய்யும்.

நாடாளுமன்ற கூட்டத்தொடரை ஜனாதிபதி திரவுபதி முர்மு தொடங்கி வைக்க உள்ளார். நாடாளுமன்ற இரு அவைகளிலும் உரையாற்றிய பின் அவர் தொடங்கி வைக்க உள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலை எதிர்நோக்கி பட்ஜெட்டில் முக்கியமான சலுகைகள் இடம்பெறலாம் என்பதால் பட்ஜெட் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com