

கோவை
அதிமுக எம்.பி. முத்துக்கருப்பன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
கடுமையான சட்டப்போராட்டங்களுக்குப் பிறகு தீர்ப்பு கிடைத்த பிறகும் தாமதப்படுத்துகின்றனர் .தமிழகத்துக்கு தண்ணீர் கொடுப்பதில் செய்யப்படும் அநீதியை மனம் ஏற்கவில்லை.
காவிரி விவகாரத்தில் மத்திய அரசு தொடர்ந்து காலம் தாழ்த்துவது மனவேதனை அளிக்கிறது. முதலமைச்சர்,துணை முதலமைச்சர் சமாதானம் செய்வார்கள் என செல்ஃபோனை அணைத்து வைத்து விட்டேன். தனது ராஜினாமா கடிதத்தை துணை குடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடுவிடம் காலை 10.45 மணிக்கு, அளிக்கப்போகிறேன் என கூறினார். அதன்படி இன்று குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவிடம் ராஜினாமா கடிதத்தை முத்துக்கருப்பன் எம்.பி அளித்தார்.
ஆனால் அதிமுக எம்.பி. முத்துக்கருப்பனின் ராஜினாமாவை ஏற்பதில் சிக்கல்? ஏற்பட்டு உள்ளது. ராஜினாமா கடிதத்தில் காரணத்தை குறிப்பிடுவது, நாடாளுமன்ற சட்ட விதிகளுக்கு எதிரானது. இதுபோன்று கடந்த ஆண்டு மாயாவதியின் ராஜினாமா கடிதம் நிராகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.