டெல்லி எய்ம்ஸ் மீது இணையதள தாக்குதல் வழக்கு: சீன, ஹாங்காங் கும்பல் பற்றி விவரம் கேட்கிறது டெல்லி போலீஸ்

சீனா, ஹாங்காங் ஆகிய நாடுகளில் உள்ள இடங்களில் இருந்து இணையதள தாக்குதல் நடந்திருப்பது தெரிய வந்துள்ளது.
டெல்லி எய்ம்ஸ் மீது இணையதள தாக்குதல் வழக்கு: சீன, ஹாங்காங் கும்பல் பற்றி விவரம் கேட்கிறது டெல்லி போலீஸ்
Published on

புதுடெல்லி,

டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரி மீது கடந்த நவம்பர் 23-ந் தேதி இணையதள தாக்குதல் நடத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து, அதன் 'சர்வர்கள்' பழுதடைந்தன. இதுகுறித்து சி.பி.ஐ., என்.ஐ.ஏ. உள்ளிட்ட அமைப்புகள் விசாரணை நடத்தி வருகின்றன.

டெல்லி போலீசின் உளவுப்பிரிவு, இணையதள பயங்கரவாத தாக்குதல் வழக்கு பதிவு செய்துள்ளது.

சீனா, ஹாங்காங் ஆகிய நாடுகளில் உள்ள இடங்களில் இருந்து இணையதள தாக்குதல் நடந்திருப்பது தெரிய வந்துள்ளது. எனவே, அங்குள்ள மின்னஞ்சல் முகவரிகளின் ஐ.பி. விவரங்களை சர்வதேச போலீசிடம் இருந்து பெற்றுத்தருமாறு சி.பி.ஐ.க்கு டெல்லி போலீசின் உளவுப்பிரிவு கடிதம் எழுதி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com