

திருவனந்தபுரம்,
கேரள மாநிலம் திரிச்சூர் தொகுதி பாஜக எம்.பி. சுரேஷ் கோபி. இவர் மத்திய பெட்ரோலியம், எரிவாயுத்துறை இணை மந்திரியாகவும் செயல்பட்டு வருகிறார்.
இதனிடையே, கேரளாவில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்து வருகிறது.
இந்நிலையில், திரிச்சூரில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய மந்திரி சுரேஷ் கோபி கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது, திரிச்சூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று தேர்தலின்போது நான் வாக்குறுதி அளிக்கவில்லை. இந்த கோரிக்கை தேர்தல் முடிவடைந்தப்பின்னரே வெளிவந்துள்ளது.
அதேவேளை, எய்ம்ஸ் மருத்துவமனை அமைய திரிச்சூர் மாவட்டம் தகுதியான இடம் என்ற கருத்தை நான் ஆதரிக்கிறேன். கேரள அரசு நிலம் வழங்கினால் திரிச்சூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும்
இவ்வாறு அவர் கூறினார்.