

புதுடெல்லி,
பிரதமர் மோடி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு ஆகிய உயர்மட்ட தலைவர்கள் பயணம் செய்யும் ஏர் இந்தியாவின் பி747 ரக விமானங்களை ஏர் இந்தியா விமானிகளே இயக்கி வருகின்றனர். ஆனால் இந்த தலைவர்கள் பயணம் செய்வதற்காக 2 பி777 ரக விமானங்கள் அமெரிக்காவில் இருந்து வாங்கப்படுகின்றன.
அடுத்த ஜூலை மாதம் இந்தியா வர இருக்கும் இந்த விமானங்களை விமானப்படை அதிகாரிகள் இயக்குவார்கள் என அறிவிக்கப்பட்டு உள்ளது. எனினும் இந்த விமானங்களை ஏர் இந்தியாதான் பராமரிக்கும் என கூறப்பட்டு உள்ளது.