ஏர் இந்தியா விமான நிறுவனத்திற்கு அரசு அமைப்புகள் ரூ.268 கோடி கடன் பாக்கி

ஏர் இந்தியா விமான நிறுவனத்திற்கு அரசு அமைப்புகள் ரூ.268 கோடி கடன் பாக்கி வைத்துள்ளது.
ஏர் இந்தியா விமான நிறுவனத்திற்கு அரசு அமைப்புகள் ரூ.268 கோடி கடன் பாக்கி
Published on

புதுடெல்லி,

ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்வதற்கு கடன் அடிப்படையில் பல்வேறு அரசு அமைப்புகளுக்கு விமான டிக்கெட்டுகள் வழங்கப்பட்டு வந்தன. இந்நிலையில், ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் செய்தி தொடர்பு அதிகாரி ஒருவர் கூறும்பொழுது, பல்வேறு அரசு அமைப்புகளும் எங்களுடைய நிறுவனத்திற்கு ரூ.268 கோடி அளவிற்கு கடன் பாக்கி வைத்து உள்ளது.

அதனால் பழைய கடன்களை அடைக்கும் வரை பல்வேறு அரசு அமைப்புகளுக்கு கடன் அடிப்படையில் விமான டிக்கெட்டுகள் வழங்குவது நிறுத்தப்பட்டு உள்ளது என தெரிவித்து உள்ளார். கடன்களை வசூல் செய்யும் பணி கடந்த 3 மாதங்களாக நடந்து வருகிறது.

எனினும், மக்களவை செயலகம், இந்திய விமான கழகம், விமான போக்குவரத்து அமைச்சகம் மற்றும் தொழிலாளர் ஆணையம் ஆகியவற்றுக்கு இந்த பட்டியலில் இருந்து விதிவிலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com