டெல்லி விமான நிலையத்தில் கண்டெய்னர் மீது மோதிய ஏர் இந்தியா விமானம்

டெல்லியில் இருந்து அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு இன்று ஏர் இந்தியா விமானம் புறப்பட்டது
டெல்லி,
தலைநகர் டெல்லியில் இருந்து அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு இன்று ஏர் இந்தியா விமானம் புறப்பட்டது. விமானத்தில் 150க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்தனர்.
விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்த நிலையில் ஈரான் வான் எல்லை மூடப்பட்டதால் விமானம் செல்வதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து பயணம் ரத்து செய்யப்பட்டு விமானம் மீண்டும் டெல்லி விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. விமானத்தில் இருந்து பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டன. இதனை தொடர்ந்து விமானம் வழக்கமான ஓடுதளத்தில் நிறுத்தி வைக்கக்க கொண்டு செல்லப்பட்டது.
அப்போது எதிர்பாராத விதமாக விமான நிலையத்தில் இருந்த கண்டெய்னர் மீது விமானம் மோதியது. இந்த சம்பவத்தில் விமானத்தின் என்ஜின் சேதமடைந்தது. இதையடுத்து அந்த விமானத்தின் பயணங்கள் ரத்து செய்யப்பட்டன. இந்த சம்பவம் தொடர்பாக ஏர் இந்தியா அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.






