

புது டெல்லி,
மேற்காசிய பகுதியில் நிலவி வரும் அரசியல் மற்றும் போர் பதற்றம் உலகளாவிய எரிசக்தி சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. மேலும் இந்த மோதல் காரணமாக விமான எரிபொருள் விலை கணிசமாக உயர்ந்து உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலைமையின் தாக்கம் விமான போக்குவரத்து துறையிலும் நேரடியாக பிரதிபலிக்க தொடங்கியுள்ளது.
இதன் விளைவாக உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான சேவைகளுக்கான டிக்கெட் கட்டணங்களை உயர்த்துவதாக கடந்த மாதம் 12ம் தேதி அன்று முதல் முறையாக ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்தது. இந்த நிலையில் விமான எரிபொருளின் விலை உயர்வு காரணமாக பயண கட்டணத்தின் விலை உயர்த்தப்படுவதாக ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த ஒரு மாதத்தில் இரண்டாவது முறை இந்த கட்டண உயர்வை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த கட்டண உயர்வை உள்ளூர் மற்றும் சர்வதேச வழிதடங்களுக்கு இந்தியாவில் அறிவித்துள்ளது. சுமார் 2000க்கும் அதிகமான கிலோ மீட்டர் வரை செல்லும் உள்ளுர் விமானங்களுக்கான கட்டணம் அதிகபட்சமாக ரூ.899 வரை உயர்த்த போவதாகவும், அதைப்போல சர்வதேச வழிதடங்களுக்கான கட்டணம் சுமார் 280 அமெரிக்கா டாலர் மதிப்பில் உயர்த்த போவதாக தெரிவித்துள்ளனர்.
ஏர் இந்தியா நிறுவனம் ஏப்ரல் மாதத்தில் புதிய கட்டண உயர்வை அறிவித்துள்ளது. இதன்மூலம், உள்நாட்டு விமான சேவைகளுக்கான கட்டண உயர்வு ஏப்ரல் 8-ம் தேதி முதல் அமலுக்கு வரும். அதேபோல, சர்வதேச விமானப் பயண கட்டண உயர்வு ஏப்ரல் 10-ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.