ஏர் இந்தியா, ஆகாசா ஏர் நிறுவனங்களிலும் டிக்கெட் கட்டணம் உயர்வு: இன்று முதல் அமல்

இண்டிகோ விமான நிறுவனம் டிக்கெட் கட்டணத்தை உயர்த்தி உள்ளது.
ஏர் இந்தியா, ஆகாசா ஏர் நிறுவனங்களிலும் டிக்கெட் கட்டணம் உயர்வு: இன்று முதல் அமல்
Published on: 

புதுடெல்லி,

விமான எரிபொருள் விலை அதிகரிப்பால் விமான நிறுவனங்கள் பெரும் இழப்பை சந்தித்து வருகின்றன. இதை ஈடுகட்டுவதற்காக விமான டிக்கெட் கட்டணத்தை உயர்த்தி வருகின்றன. அந்த வகையில் நாட்டின் மிகப்பெரிய விமான நிறுவனமான இண்டிகோ சமீபத்தில் டிக்கெட் கட்டணத்தை உயர்த்தியது. டிக்கெட்டில் விமான எரிபொருள் துணை கட்டணம் அதிகரிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனங்களும் டிக்கெட் கட்டணத்தை இன்று (வெள்ளிக்கிழமை) முதல் உயர்த்துவதாக அறிவித்து உள்ளன. அதன்படி உள்நாட்டு பயணங்களுக்கு ரூ.400 முதல் ரூ.1,200 வரை தொலைவை பொறுத்து அதிக கட்டணம் வசூலிக்கப்படும்.

வெளிநாட்டு விமானங்களில் 55 டாலர் முதல் 215 டாலர் வரை நாடுகள் மற்றும் பிராந்தியத்தை பொறுத்து அதிகரிக்கிறது. இதைப்போல ஆகாசா ஏர் விமானங்களிலும் இன்று முதல் டிக் கெட் கட்டணம் அதிகரிக்கிறது. உள்நாட்டு பயணங்களுக்கு ரூ.375 முதல் ரூ.1,150 வரையும், வெளிநாட்டு விமானங்களில் ரூ.2,500 வரையும் தூரத்தை பொறுத்து கூடுதலாக வசூலிக்கப்படும். விமான டிக்கெட் விலை உயர்வால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com