

புதுடெல்லி: மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் பதற்றமான சூழல் காரணமாக, சவுதி அரேபியாவுக்கான விமான சேவை ரத்து நடவடிக்கையை டிசம்பர் 31-ம் தேதி வரை ஏர் இந்தியா நிறுவனம் நீட்டித்துள்ளது. இதுதொடர்பாக ஏர் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சவுதி அரேபியாவின் ஜெட்டா, ரியாத் மற்றும் தம்மாம் ஆகிய நகரங்களுக்குச் செல்லும் மற்றும் அங்கிருந்து புறப்படும் அனைத்து விமானங்களும் டிசம்பர் 31-ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாகத் தெரிவித்துள்ளது.
இந்த அறிவிப்பின்படி, நவம்பர் 27-ம் தேதி அல்லது அதற்கு முன்பு முன்பதிவு செய்து, டிசம்பர் 31-ம் தேதி வரை பயணம் செய்யத் திட்டமிட்டுள்ள பயணிகளுக்கு இரண்டு வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. பயணத்தை ரத்து செய்தால் முழு கட்டணத்தையும் திரும்பப் பெறலாம் பயணத் தேதியை மாற்றிக்கொள்பவர்கள் சவுதி அரேபியாவில் செயல்பாட்டில் உள்ள ஏர் இந்தியா விமான நிலையங்கள் வழியாகப் பயணம் செய்யலாம். மாற்றியமைக்கப்பட்ட பயணத்தை 2027-ம் ஆண்டு ஜனவரி 14-ம் தேதிக்குள் முடிக்க வேண்டும்.ஏர் இந்தியா வாடிக்கையாளர் சேவை எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.
- +91 11 69329333
- +91 11 69329999
என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இதற்கிடையே, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் டிசம்பர் 2-ம் தேதி முதல் ஜெட்டா - மங்களூரு இடையே வாரத்திற்கு 3 விமான சேவைகளை மீண்டும் தொடங்குகிறது. அதேசமயம் ரியாத், தம்மாம் நகரங்களுக்கான சேவைகள் டிசம்பர் 31 வரை நிறுத்தப்பட்டுள்ளன.