அமெரிக்காவில் இருந்து மும்பைக்கு ரூ. 1.41 கோடி மதிப்புள்ள தங்கம் கடத்திய விமான ஊழியர் கைது

ஏர் இந்தியா விமானத்தில் தங்கம் கடத்தி கொண்டுவரப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது.
அமெரிக்காவில் இருந்து மும்பைக்கு ரூ. 1.41 கோடி மதிப்புள்ள தங்கம் கடத்திய விமான ஊழியர் கைது
Published on

மும்பை,

அமெரிக்காவின் நியூயார்க்கில் இருந்து நேற்று இந்தியாவின் மும்பைக்கு வந்த ஏர் இந்தியா விமானத்தில் தங்கம் கடத்தி கொண்டுவரப்படுவதாக வருவாய் புலனாய்வுத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, பயணிகள், விமான ஊழியர்களிடம் அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர். அப்போது, விமானத்தில் பணியாற்றிய ஊழியரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் 1.37 கிலோ கிராம் தங்கத்தை கடத்தி வந்தது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து விமான ஊழியரை கைது செய்த அதிகாரிகள் அவரிடமிருந்து கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்தனர். இந்த தங்கத்தின் மதிப்பு 1.41 கோடி ரூபாய் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த கடத்தலுக்கு மூளையாக செயல்பட்ட நபரையும் அதிகாரிகள் கைது செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com