ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் ஊழியர்களிடம் தவறாக நடந்து கொண்ட பயணி இறக்கிவிடப்பட்டார்..!

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் ஊழியர்களிடம் தவறாக நடந்து கொண்ட பயணி இறக்கிவிடப்பட்ட சம்பவம் அரங்கேறி உள்ளது.
கோப்புப்படம் PTI
கோப்புப்படம் PTI
Published on

பெங்களூரு,

பெங்களூரில் இருந்து கோவா செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் ஏறும் போது, பயணி ஒருவர், கேபின் ஊழியர்களிடம் தவறாக நடந்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அந்த பயணி இறக்கி விடப்பட்டார். விமானத்தில் உள்ள மற்ற பயணிகளின் வசதிக்காக அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறும்போது, "பெங்களூரில் இருந்து கோவா செல்லும் விமானத்தில் ஏறும் போது, பயணி ஒருவர் கேபின் ஊழியர்களிடம் தகாத முறையில் நடந்து கொண்டார். இதையடுத்து அவர் இறங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டார். விமானத்தில் உள்ள மற்ற பயணிகளின் வசதிக்காக அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எங்கள் விருந்தினர்கள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்கு நாங்கள் முன்னுரிமை அளிக்கிறோம். எங்கள் விமானங்களில் இடையூறு விளைவிக்கும் நடத்தைகளை நாங்கள் பொறுத்துக் கொள்வதில்லை" என்று கூறினார்.

முன்னதாக கவுகாத்தியில் இருந்து அகர்தலா நோக்கிச் சென்ற இண்டிகோ விமானத்தில், அவசர காலத்தில் பயன்படுத்தப்படும் எமர்ஜென்சி கதவின் அருகே அமர்ந்திருந்த பயணி ஒருவர் திடீரென அந்த கதவை திறக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. அகர்தலாவில் விமானம் தரையிறங்கிய போது, அவர் கைது செய்யப்பட்டார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com