ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் திடீர் கோளாறு- அவசரமாக தரையிறக்கம்


ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் திடீர் கோளாறு- அவசரமாக தரையிறக்கம்
x

விமானத்தின் கேபின் ஏ.சி.யில் சில தொழில்நுட்பக் கோளாறு இருந்தது.

கோழிக்கோடு,

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் இருந்து 188 பயணிகளுடன் கத்தார் தலைநகர் தோஹாவுக்கு நேற்று காலை 9 மணிக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் புறப்பட்டது. அந்த விமானம் புறப்பட்டுச்சென்ற 2 மணி நேரத்தில் நடுவானில் பறந்தபோது அதில் திடீரென்று தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து அந்த விமானம், கோழிக்கோடு விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.

இதுபற்றி விமானநிலைய அதிகாரிகள் கூறுகையில், விமானத்தின் கேபின் ஏ.சி.யில் சில தொழில்நுட்பக் கோளாறு இருந்தது. இதையடுத்து அந்த விமானம் மீண்டும் கோழிக்கோடு விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. அதில் இருந்த பயணிகள், மாற்று விமானம் மூலம் தோஹா செல்ல ஏற்பாடு செய்யப்படும் என்றனர். இதேபோல் ஆமதாபாத்தில் இருந்து டையூ செல்ல இருந்த இண்டிகோ விமானத்தில், தொழில் நுட்ப கோளாறு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதால் அந்த விமானம் ரத்து செய்யப்பட்டது.

1 More update

Next Story