பறவை மோதியதால் பெங்களூரு புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ரத்து


பறவை மோதியதால் பெங்களூரு புறப்பட்ட  ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ரத்து
x

விஜயவாடாவில் இருந்து பெங்களூருக்கு புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் பறவை மோதியது.

விஜயவாடா:

விஜயவாடாவில் இருந்து பெங்களூருவுக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் பறவை மோதியதால், அந்த விமான சேவை ரத்து செய்யப்பட்டது. இதனால் பயணிகள் பெரும் சிரமத்தை அனுபவித்தனர்.விமானம் ஓடுபாதையில் இயக்கப்பட்டுக் கொண்டிருந்தபோது, திடீரென கழுகு ஒன்று மோதியது. இதனால் விமானத்தின் முன்பகுதி சேதமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. உடனடியாக தொழில்நுட்ப நிபுணர்கள் விமானத்தை பரிசோதனை செய்து, சேதத்தை சரிசெய்யும் பணிகளை தொடங்கினர். சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணையும் நடத்தி வருகின்றனர்.

சேதம் காரணமாக விமானப் பயணம் ரத்து செய்யப்பட்டதாக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அறிவித்தது. இதன் விளைவாக பயணிகள் பல்வேறு சிரமங்களை சந்தித்தனர். எனினும், அவர்களுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டதாகவும், ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துவதாகவும் நிறுவனம் அறிவித்துள்ளது. பறவைகள் மோதுதல் காரணமாக விமானப் போக்குவரத்து தொடர்ந்து பாதிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில், 272 பயணிகளுடன் சென்ற இண்டிகோ விமானம் பறவை மோதியதால் நாக்பூருக்கு திருப்பி அனுப்பப்பட்டதும் நினைவுகூரத்தக்கது.

1 More update

Next Story