ஏர் இந்தியா விமானத்தில் கோளாறு: டெல்லியில் அவசரமாக தரையிறக்கம்


ஏர் இந்தியா விமானத்தில் கோளாறு:  டெல்லியில் அவசரமாக தரையிறக்கம்
x

சமீப காலமாக விமானத்தில் அடிக்கடி தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு வருவது பயணிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுடெல்லி,

டெல்லி விமான நிலையத்தில் இருந்து இந்தூருக்கு ஏர் இந்தியா விமானம் புறப்பட்டு சென்றது. விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் வலது பக்கம் உள்ள என்ஜினில் தீ பற்றும் அறிகுறிகள் தென்பட்டதால், விமானி அறையில் அலாரம் ஒலித்தது. இதையடுத்து டெல்லி விமான நிலையத்திற்கு விமானி தகவல் கொடுத்தார்.

அதிகாரிகள் விமானத்தை தரையிறக்க அனுமதி கொடுத்ததும், டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்தில் விமானம் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது.விமானத்தில் இருந்து பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேறினர்.

பயணிகளுக்கு தங்குமிடம் மற்றும் மாற்று ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டது. விமானம் மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே வந்ததால், பயணிகள் தாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு சரியான நேரத்திற்கு, செல்ல முடியாமல் கடும் அவதி அடைந்தனர். பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துகிறோம் என ஏர் இந்தியா விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

1 More update

Next Story