ஏர் இந்தியா விமானத்தை கடத்தப்போவதாக மிரட்டல்; பயணிகள் பீதி

விமானத்தின் கழிவறையில் இருந்த கண்ணாடியில், விமானம் கடத்தப்படும் என மிரட்டல் வாசகம் எழுதப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
ஏர் இந்தியா
ஏர் இந்தியா
Published on: 

மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தா விமான நிலையத்தில் இருந்து மும்பைக்கு புறப்படத் தயாராக இருந்த ஏர் இந்தியா விமானத்துக்கு கடத்தல் மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கொல்கத்தாவில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து மும்பைக்கு செல்லும் ஏர் இந்தியா விமானம் இன்று காலை 10.20 மணிக்கு புறப்படத் தயாராக இருந்தது.

அப்போது விமானத்தின் கழிவறையில் இருந்த கண்ணாடியில், விமானம் கடத்தப்படும் என மிரட்டல் வாசகம் எழுதப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து விமானி உடனடியாக விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார்.இதனைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமானம் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது. விமானத்தில் ஏறியிருந்த பயணிகள் அனைவரும் கீழே இறக்கிவிடப்பட்டனர்.

தகவலறிந்து வந்த மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படையினர் மற்றும் விமான நிலைய பாதுகாப்புப் படையினர் விமானத்தில் தீவிர சோதனை மேற்கொண்டனர். மேலும், விமான நிலைய வளாகம் மற்றும் விமானத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, மிரட்டல் வாசகத்தை எழுதியது யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் . விமானத்தை கடத்தப்போவதாக விடுத்த மிரட்டல் பயணிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

X