பயணியை தாக்கிய ஏர் இந்தியா விமானி கைது

பயணியை தாக்கிய விமானி கேப்டன் வீரேந்திர செஜ்வால் டெல்லி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
புதுடெல்லி,
டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில், கடந்த 19-ந்தேதி பயணி ஒருவர் மீது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் விமானியான கேப்டன் வீரேந்திர செஜ்வால் தாக்குதல் நடத்தியதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக துறை ரீதியான விசாரணை நடைபெற்றது.
இந்த விசாரணையின்போது சி.சி.டி.வி. காட்சிகள் சேகரிக்கப்பட்டு, வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டன. இந்த விசாரணையில் குற்றச்சாட்டு உறுதியான நிலையில், பயணியை தாக்கிய விமானி வீரேந்திர செஜ்வால் டெல்லி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். அவர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
Related Tags :
Next Story






