காற்று மாசு அதிகரிப்பு: டெல்லியில் ஊதுபத்தி கொளுத்தவும் தடை

மனிதர்கள் சுவாசிப்பதற்கு தேவையான சுத்தமான காற்று உள்ளதா என்பதை ஏர் குவாலிட்டி இண்டெக்ஸ் (காற்று தர சுட்டெண்) அளவீடு மூலம் நிர்ணயிப்பது வழக்கம்.
காற்று மாசு அதிகரிப்பு: டெல்லியில் ஊதுபத்தி கொளுத்தவும் தடை
Published on

புதுடெல்லி,

ஏர் குவாலிட்டி இண்டெக்ஸ் அளவீடு 50க்குள் இருந்தால் நல்ல காற்று, 51100 என்ற அளவில் இருந்தால் திருப்தி, 101200 மிதமானது, 201300 மோசமானது, 301400 மிக மோசமானது, 401500 மிக மிக மோசமானது என்று பொருள்.

இந்த நிலையில் டெல்லியில் நேற்று பகல் 3 மணிக்கு இந்த அளவீடு 401 என்ற அளவை எட்டியது. சமீப காலத்தில் இந்த அளவுக்கு டெல்லியில் காற்று மாசுபட்டு தரம் குறைந்திருப்பது இதுவே முதல்முறை என தகவல்கள் கூறுகின்றன.

இதன் காரணமாக வீடுகளில் தெய்வ வழிபாட்டுக்கு ஊதுபத்தி கொளுத்துவதும் காற்று மாசை ஏற்படுத்தும் என கூறி அதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மத்திய அரசின் காற்று தர கணிப்பு மற்றும் ஆராய்ச்சி அமைப்பு சபார் விடுத்துள்ள அறிக்கையில், அறை ஜன்னல்களை மூடி விடுங்கள், அடிக்கடி வீட்டை ஈரத்துணியினால் துடைத்துக்கொள்ளுங்கள், விறகு கட்டை, மெழுகுவர்த்தி, ஊதுபத்தியைக் கூட கொளுத்துவதை நிறுத்தி விடுங்கள் என மக்களுக்கு கூறப்பட்டுள்ளது.

மக்கள் வெளியே செல்கிறபோது என்95 முகமூடிகளை (மாஸ்க்) பயன்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com