டெல்லியில் 3 ஆண்டுகளுக்கு பிறகு காற்றின் தரம் உயர்ந்தது

டெல்லியில் மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஜனவரி-மார்ச் காலகட்டத்தில் காற்றின் தரக் குறியீடு உயர்ந்துள்ளது.
டெல்லியில் 3 ஆண்டுகளுக்கு பிறகு காற்றின் தரம் உயர்ந்தது
Published on

புதுடெல்லி,

தலைநகர் புதுடெல்லியில் இன்று (ஞாயிறு) காலையில் வெயில் குறைந்து இருந்தது. மேலும் காற்றின் தரம் திருப்திகரமான பிரிவின்கீழ் நீடிக்கிறது. காற்றுத் தர மேலாண்மை ஆணையத்தின் (CAQM) தகவலின்படி இன்று காலை 9 மணிக்கு காற்றின் தரக்குறியீடு (AQI) 89 ஆக இருந்தது.

காற்றின் தரக்குறியீடு அளவுகள் 0-50 என இருந்தால் நல்லது, 51-100 திருப்திகரமானது, 101-200 மிதமானது, 201-300 மோசம், 301-400 மிகவும் மோசமானது, 401-500 கடுமையானது என்று வகைப்படுத்தப்பட்டுள்ளன.

கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நேற்று காற்றின் தரம் உயர்ந்துள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடந்த ஜனவரி 1 முதல் மார்ச் 15 வரையிலான காலகட்டத்தில் நேற்று காற்றின் தரம் தூய்மையாக (85) இருந்தது என்று காற்றுத் தர மேலாண்மை ஆணையம் தெரிவித்திருந்தது. இந்த நிலை இன்றும் நீடிக்கிறது. இன்று டெல்லியில் வெப்பநிலை குறைந்தபட்சம் 18 டிகிரி செல்சியசாக பதிவானது. இது பருவகால சராசரி அளவைவிட 2.9 புள்ளிகள் அதிகமாகும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com