ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு: ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் முன்ஜாமீன் மனு நவம்பர் 1-ம் தேதிக்கு ஒத்தி வைப்பு

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் முன்ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணை நவம்பர் 1-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு: ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் முன்ஜாமீன் மனு நவம்பர் 1-ம் தேதிக்கு ஒத்தி வைப்பு
Published on

புதுடெல்லி,

ஏர்செல் நிறுவனத்தில் மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனத்தின் துணை நிறுவனம் ரூ.3,500 கோடி முதலீடு செய்ததில் நடந்த முறைகேடு தொடர்பாக முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் மீது சி.பி.ஐ.யும், அமலாக்கப்பிரிவும் தனித்தனியாக வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. இந்த வழக்கு விசாரணை டெல்லி நீதிமன்றத்தில் நடைப்பெற்று வருகிறது.

இந்தநிலையில் இந்த வழக்கு மீதான விசாரணை இன்று டெல்லி நீதிமன்றத்தில் வந்தது. ப.சிதம்பரம் ஆஜரானதை அடுத்து வழக்கு விசாரணையை நவம்பர் 1ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது. மேலும் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் கைதுக்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடை நவம்பர் 1ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com