புனேவில் பயிற்சி விமானம் விபத்து

புனேவில் பயிற்சி விமானம் விபத்துக்குள்ளானதாக சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
புனேவில் பயிற்சி விமானம் விபத்து
Published on

புனே,

மராட்டிய மாநிலம் புனேவில் கோஜுபாவி கிராமத்திற்கு அருகே பியிற்சி விமானம் விபத்துக்குள்ளானது. பாராமதி விமானநிலையத்திற்கு வடக்கே 2 மைல் தொலைவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

இருப்பினும் இந்த விபத்தில் பயிற்றுவிப்பாளர் மற்றும் பயிற்சியாளர் இருவரும் பாதுகாப்பாக உள்ளனர் என்று சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் தெரிவித்துள்ளது. விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவில்லை. மேலும் விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

கடந்த நான்கு நாட்களில் நடந்த 2-வது சம்பவம் இதுவாகும். முன்னதாக கடந்த 19ஆம் தேதி கப்டல் கிராமம் அருகே பயிற்சி விமானம் விபத்துக்குள்ளானதில், விமானி மற்றும் துணை விமானி இருவர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com