விமானத்தில் பயணிக்க மாற்றுத்திறனாளிகளுக்கு அனுமதி மறுக்க கூடாது - சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம்

மாற்றுத்திறனாளி பயணிகள் விமானத்தில் ஏற அனுமதி மறுக்க கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

புதுடெல்லி,

மாற்றுத்திறனாளி பயணிகளை விமானத்தில் ஏற அனுமதி மறுக்க கூடாது என சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) இன்று தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக டிஜிசிஏ தரப்பில், "திருத்தப்பட்ட விதியின் கீழ், விமான போக்குவரத்து நிறுவனங்கள் ஒரு நபர் மாற்றுத்திறனாளி என்ற அடிப்படையில் அவர்களை விமானத்தில் ஏற அனுமதி மறுக்கக்கூடாது. அவ்வாறு நடந்தால், விமான நிறுவனங்கள் மாற்றுதிறனாளி பயணிகளுக்கு எழுத்துப்பூர்வமாக அதற்கான சரியான காரணங்களை உடனடியாகத் தெரிவிக்க வேண்டும் " என தெரிவித்துள்ளது.

குறிப்பாக பயணியின் உடல்நிலை குறித்து விமான நிறுவனங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டால் அந்த பயணியின் மருத்துவ பரிசோதனையை அவர்கள் கோரலாம். மருத்துவக் பரிசோதனை முடிவுகளுக்கு பிறகு குறிப்பிட்ட பயணியை ஏற்றிச் செல்வது குறித்து விமான நிறுவனம் முடிவை எடுக்கலாம். அதன் பிறகும் பயணியை விமானத்தில் ஏற்றிச் செல்ல மறுக்கும் பட்சத்தில், அதற்கான காரணங்களை உடனடியாக பயணிகளுக்கு விமான நிறுவனங்கள் எழுத்துப்பூர்வமாக தெரிவிக்க வேண்டும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com