‘இந்தியாவில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே விமானம் இருந்தது’ - மத்திய மந்திரி சிவராஜ் சிங் சவுகான்

மகாபாரத காலத்திலேயே மேம்பட்ட தொழில்நுட்பங்களை பயன்படுத்த இந்தியா கற்றுக்கொண்டது என மத்திய மந்திரி சிவராஜ் சிங் கூறியுள்ளார்.
போபால்,
போபாலில் உள்ள இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மத்திய பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்-மந்திரியும், மத்திய மந்திரியுமான சிவராஜ் சிங் சவுகான் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-
“ரைட் சகோதரர்களுக்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவில் ‘புஷ்பக விமானம்‘ இருந்தது. மகாபாரத காலத்திலேயே டிரோன்கள் மற்றும் ஏவுகணைகளைப் போன்ற மேம்பட்ட தொழில்நுட்பங்களை பயன்படுத்த இந்தியா கற்றுக்கொண்டது. ஜான் டால்டனுக்கு முன்பே மகரிஷிகள் அணுக்கோட்பாட்டை முன்வைத்தனர். நமது நாட்டின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே வளர்ந்துவிட்டது.”
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story






