விமான நிலையங்கள் தனியார் மயம் விவகாரம்: ஊழியர்களுக்கு பாதிப்பு இல்லை; மத்திய அரசு விளக்கம்

விமான நிலையங்கள் தனியார் மயமாக்கல் காரணமாக ஊழியர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
விமான நிலையங்கள் தனியார் மயம் விவகாரம்: ஊழியர்களுக்கு பாதிப்பு இல்லை; மத்திய அரசு விளக்கம்
Published on

புதுடெல்லி,

நாடாளுமன்ற மேலவையில் தி.மு.க. எம்.பி. வில்சன், நாடு முழுவதும் உள்ள நெருக்கடியான சூழ்நிலையில், விமான நிலையங்களை தனியார் மயமாக்க மத்திய அரசு ஏதும் முடிவு செய்து உள்ளதா? திடீரென தனியார் மயமாக்கல் ஏன்? அதற்கான காரணம் என்ன? என எழுத்துபூர்வமாக கேள்வி எழுப்பி இருந்தார்.

இதற்கு மத்திய அரசு சார்பில் அளித்துள்ள விளக்கத்தில், நாட்டில் 6 விமான நிலையங்களை ஏலம் எடுக்க 31 தகுதி வாய்ந்த நபர்களிடம் இருந்து விருப்பம் வந்துள்ளது. இந்த நடவடிக்கையால், ஊழியர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என தெரிவித்துள்ளது.

வளர்ந்து வரும் விமான நிலைய தேவையை பூர்த்தி செய்யவே தனியார் துறையின் பங்களிப்பு ஊக்குவிக்கப்படுகிறது. தனியார் ஒப்பந்ததாரர்களிடம் இருந்து பெறப்படும் வருவாய் மூலம் மற்ற விமான நிலையங்களின் மேம்பாட்டு வளர்ச்சி பணிகளை மேற்கெள்ள முடியும் என அரசு விளக்கம் அளித்துள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com