அஜய் மக்கான் ராஜினாமா செய்ததாக வெளியான தகவலுக்கு காங்கிரஸ் மறுப்பு

டெல்லி காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் இருந்து அஜய் மக்கான் ரஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அஜய் மக்கான் ராஜினாமா செய்ததாக வெளியான தகவலுக்கு காங்கிரஸ் மறுப்பு
Published on

புதுடெல்லி,

முன்னாள் எம்.பியான அஜய் மக்கான் 2015 ஆம் ஆண்டு முதல் டெல்லி காங்கிரஸ் தலைவராக இருந்து வருகிறார். 54 வயதான அஜய் மக்கான், உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சைக்கு வெளிநாடு செல்ல இருப்பதாகவும், இதனால், டெல்லி காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாகவும் கட்சி தலைமைக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகின. சில ஆங்கில தொலைக்காட்சிகளிலும் இந்த செய்திகள் ஒளிபரப்பாகின.

ஆனால், டெல்லி காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் இருந்து அஜய் மக்கான் ராஜினாமா செய்யவில்லை என்று காங்கிரஸ் கட்சி விளக்கம் அளித்துள்ளது. அவருக்கு உடல் நலனில் சில பிரச்சினைகள் இருப்பதகாவும், இதற்காக பரிசோதனைக்கு சென்றுவிட்டு, விரைவில் திரும்புவார் என்றும் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

முன்னதாக, டெல்லி உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியை சந்தித்ததும், பொறுப்பில் இருந்து விலகுவதாக அஜய் மக்கான் தெரிவித்தார். ஆனால், இதை காங்கிரஸ் தலைமை ஏற்க மறுத்துவிட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com