தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் 10-ம் தேதி ரஷியா பயணம்

அமைதிப் பேச்சுவார்த்தையை முன்னெடுக்கும் விதமாக, இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், இந்த வாரத்தில் ரஷியா செல்கிறார்.
தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் 10-ம் தேதி ரஷியா பயணம்
Published on

புதுடெல்லி,

ரஷியாவின் நெருங்கிய நட்பு நாடாக உள்ள இந்தியா, உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர மத்தியஸ்தம் செய்யலாம் என்று புதின் தெரிவித்துள்ளார். இதேபோல உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும் கூறியுள்ளார். இரு நாட்டு அதிபர்களுடனும் இந்தியாவுக்கும், பிரதமர் மோடிக்கும் நல்லுறவு இருக்கும் நிலையில், போரை முடிவுக்கு கொண்டு வர இந்தியாவின் முன்முயற்சியை உலகமே எதிர்பார்க்கிறது.

இந்நிலையில், அமைதிப் பேச்சுவார்த்தையை முன்னெடுக்கும் விதமாக, இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல்,  வரும் 10 மற்றும் 11-ம் தேதிகளில் ரஷியாவில் சுற்றுப்பயணம் செய்கிறார். பிரிக்ஸ் மாநாட்டுக்காக செல்லும் அவர், ரஷியா மற்றும் சீனா நாடுகளின் உயர் அதிகாரிகள், அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார். அஜித் தோவலின் இந்த பயணத்தின் போது ரஷிய அதிபர் புதினை அஜித் தோவல் சந்தித்து பேசுகிறார். அப்போது ரஷியா - உக்ரைன் மோதலை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாகவும், அமைதிக்கான முயற்சிகள் தொடர்பாகவும் அஜித் தோவல் விவாதிக்கலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com