அஜித் தோவல் வீட்டில் பாதுகாப்பு குறைபாடு: 3 கமாண்டோ வீரர்கள் பணி நீக்கம்

அஜித் தோவல் வீட்டில் பாதுகாப்பு குறைபாடு காரணமாக, 3 கமாண்டோ வீரர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

புதுடெல்லி,

தேசிய பாதுகாப்பு ஆலோசகரான அஜித் தோவலின் வீடு டெல்லியில் உள்ளது. 'இசட் பிளஸ்' பாதுகாப்பு பிரிவில் இருக்கும் அவருக்கு மத்திய தொழில் பாதுகாப்பு படையை (சி.ஐ.எஸ்.எப்.) சேர்ந்த கமாண்டோ வீரர்கள் பாதுகாப்பு வழங்கி வருகின்றனர்.

டெல்லியில் உயர் பாதுகாப்பு மிகுந்த பகுதியில் இருக்கும் அஜித் தோவலின் வீட்டை கடந்த பிப்ரவரி 16-ந்தேதி காலையில் பெங்களூருவை சேர்ந்த மர்ம நபர் ஒருவர் காரைக்கொண்டு மோத முயன்றார். ஆனால் அவர் இடையியே வழிமறித்து கைது செய்யப்பட்டார்.

இந்த சம்பவத்தின் போது அஜித் தோவலின் வீட்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 3 கமாண்டோ வீரர்கள் மற்றும் அஜித் தோவலுக்கு பாதுகாப்பு வழங்கும் படையின் தலைவரான டி.ஐ.ஜி மற்றும் அவரது கீழ் அதிகாரி ஆகியோர் மீது நீதி விசாரணை நடந்து வந்தது. இதில் அஜித் தோவலின் பாதுகாப்பில் அலட்சியமாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து 3 கமாண்டோ வீரர்கள் அதிரடியாக பணி நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். அதிகாரிகள் இருவரும் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com