தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவராக அஜித்பவாரின் மனைவி தேர்வு

சுனேத்ரா பவார் தேசிய வாத காங்கிஸ் கட்சியின் தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தேசியவாத காங்கிரஸ் கட்சி  தலைவராக அஜித்பவாரின் மனைவி தேர்வு
Published on

மும்பை,

புனே பராமதி விமான விபத்தில் சிக்கி தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் அஜித்பவார் உயிரிழந்த பிறகு மராட்டிய அரசியலில் பல அதிரடி திருப்பங்கள் நடந்தது. அவரது மறைவிற்கு பிறகு அவரது மனைவி சுனேத்ரா பவார் மராட்டிய மாநில துணை முதல் மந்திரியாக பதவி ஏற்று கொண்டார். இதன்பிறகு கட்சி கூட்டத்தின் போது சுனேத்ரா பவார் தேசிய வாத காங்கிஸ் கட்சியின் தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதனை தொடர்ந்து தேசிய வாத காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் ஒர்லியில் நடந்தது. இந்த கூட்டத்தின் போது கட்சி மூத்த தலைவர்கள் கலந்து கொண்டு சுனேத்ரா பவாருக்கு தேசிய தலைவராக நியமனம் செய்ய ஆதரவு தெரிவித்தனர்.

மேலும் அனைத்து உறுப்பினர்களும் கைகளை உயர்த்தி தங்களின் ஆதரவை வழங்கினர். இதையடுத்து மாநில துணை முதல் மந்திரி சுனேத்ரா பவார் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த கூட்டத்தின் போது மறைந்த அஜித்பவாரின் அரசியல் பணிகள் குறித்தும், கட்சியின் திறம்பட செயலாற்றல் குறித்து நினைவு கூர்ந்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com