

லக்னோ,
உத்தரபிரதேசத்தில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக பணிகள் நடந்து வந்த சரயு நதிநீர் கால்வாய் திட்டத்தை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். இதற்கு சில மணி நேரத்துக்கு முன் சமாஜ்வாடி தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான அகிலேஷ் யாதவ் தனது டுவிட்டர் தளத்தில் கூறுகையில், தனது ஆட்சிக்காலத்தில் இந்த திட்டம் 4-ல் 3 பங்கு பணிகள் முடிக்கப்பட்டதாகவும், மீதமுள்ள பணிகளை மேற்கொள்ள தற்போதைய அரசுக்கு 5 ஆண்டுகள் தேவைப்பட்டு இருப்பதாகவும் குற்றம் சாட்டி இருந்தார்.
அவர் மேலும் கூறுகையில், உலகில் 2 வகையான மக்கள் உள்ளனர். சிலர் உண்மையிலேயே உழைப்பவர்கள், சிலர் அடுத்தவர்களின் உழைப்பை சொந்தமாக்குபவர்கள். இதுதான் சமாஜ்வாடி அரசுக்கும், தற்போதைய ரிப்பன் வெட்டும் அரசுக்கும் இடையே உள்ள வேறுபாடு என கூறியிருந்தார். இதற்கு மேற்படி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பதிலடி கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.