அகிலேஷ்யாதவ் முதலில் என் மகன், அவருக்கு என் ஆசிர்வாதம் எப்போதும் உண்டு: முலாயம் சிங் யாதவ்

அகிலேஷ்யாதவ் முதலில் என் மகன், அவருக்கு என் ஆசிர்வாதம் எப்போதும் உண்டு என்று முலாயம் சிங் யாதவ் தெரிவித்துள்ளார்.
அகிலேஷ்யாதவ் முதலில் என் மகன், அவருக்கு என் ஆசிர்வாதம் எப்போதும் உண்டு: முலாயம் சிங் யாதவ்
Published on

லக்னோ,

உத்தர பிரதேசத்தில் கடந்த ஆண்டு சமாஜ்வாடி கட்சிக்குள் பிளவு ஏற்பட்டது. சமாஜ்வாடி கட்சியின் தேசிய தலைவராக இருந்த முலயாம் சிங்கிற்கும் அப்போது முதல் அமைச்சராக இருந்த அகிலேஷ் யாதவுக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டது. கட்சியில் தந்தை மகன் இடையே ஏற்பட்ட அதிகார மோதல், தேர்தல் கமிஷன் வரை சென்றது. இதற்கிடையில், அங்கு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் சமாஜ்வாடி கட்சி தோல்வி அடைந்தது. பாரதீய ஜனதா கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.

இந்த நிலையில், கடந்த அக்டோபர் மாதம் சமாஜ்வாடி கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் துவங்கியது. இதில், கட்சியின் தேசிய தலைவராக அகிலேஷ் யாதவ் தேர்வு செய்யப்பட்டார். கட்சியின் தேசிய தலைவர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டதில் இருந்து, அகிலேஷ் யாதவ் மீது அதிருப்தியில் இருந்த முலாயம் சிங், தற்போது தனது நிலைப்பாட்டை மாற்றி அகிலேஷ் யாதவை வெகுவாக பாராட்டி உள்ளார். முலாயம் சிங்கின் 79 வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டது.

இதற்காக லக்னோவில் பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட்டு பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. முலாயம் சிங் மேடைக்கு வந்ததும், அகிலேஷ் யாதவ் அவரது காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினார். பின்னர் மேடையில் இருந்த கேக்கை வெட்டி முலாயம் சிங் யாதவ் தனது பிறந்த நாள்விழாவை கொண்டாடினார். நிகழ்ச்சியில் பேசிய முலாயம்சிங் யாதவ், அகிலேஷ்சிங் யாதவ் தனது மகன், அவருக்கு எப்போதும் எனது ஆசிர்வாதம் உண்டு என்றார். முலாயம்சிங் ஆதரவாளரான ஷிவ்பால் இந்த பிறந்த நாள் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com