அல்கொய்தா விடுத்த எச்சரிக்கை - முக்கிய இடங்களில் பலத்த பாதுகாப்பு

இந்தியாவில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்துவோம் என அல்கொய்தா பயங்கரவாதிகள் எச்சரிக்கை விடுத்த நிலையில் முக்கிய இடங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
அல்கொய்தா விடுத்த எச்சரிக்கை - முக்கிய இடங்களில் பலத்த பாதுகாப்பு
Published on

புதுடெல்லி,

ஞானவாபி மதவழிபாட்டு தளம் தொடர்பாக நடந்த விவாதத்தில் பங்கேற்ற பாஜக செய்தித்தொடர்பாளர் நுபுர் சர்மா, இஸ்லாமிய மத கடவுளின் இறை தூதர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதற்கு பல்வேறு இஸ்லாமிய நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இதனையடுத்து, இஸ்லாமிய மத கடவுளின் இறை தூதர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததற்காக இந்தியா மீது தற்கொலைப்படை தாக்குதல் நடத்துவோம் என்று அல்கொய்தா பயங்கரவாத அமைப்பு எச்சரிக்கை விடுத்து கடிதம் ஒன்றை வெளியிட்டது.

நபிகளின் (இஸ்லாமிய மத இறைதூதர்) கண்ணியத்தை காப்பதற்காக டெல்லி, மும்பை, உத்தரபிரதேசம், குஜராத் ஆகிய பகுதிகளில் நாங்கள் தற்கொலைப்படை தாக்குதல்களை நடத்துவோம். தங்கள் முடிவுக்காக டெல்லி, மும்பை, உத்தரபிரதேசம், குஜராத்தை சேர்ந்த காவி பயங்கரவாதிகள் தங்கள் முடிவுக்காக காத்திருக்க வேண்டும்' என அந்த கடித்ததில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அல்கொய்தா அமைப்பு விடுத்த எச்சாக்கை குறித்து தீவிரமாக ஆராய்வதாகவும் டெல்லி, மும்பை, உத்தரபிரதேசம், குஜராத் ஆகிய இடங்களில் உள்ள விமான நிலையங்கள்,ரெயில் நிலையங்கள் சந்தை உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளதாக மத்திய புலனாய்வு அமைப்பு தொவித்து உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com