அரியானாவில் அனைத்து கொரோனா கட்டுப்பாடுகளும் நீக்கம்..! மாநில அரசு அறிவிப்பு

அரியானாவில் அனைத்து கொரோனா கட்டுப்பாடுகளும் நீக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சண்டிகர்,

நாட்டில் தொடர்ந்து கொரோனா பரவல் குறைந்து வருவதால், கூடுதல் கட்டுப்பாடுகளை தளர்த்தும்படி அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.

இது தொடர்பாக அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷண் எழுதிய கடிதத்தில், கடந்த ஜன.,21 முதல் கொரோனா பரவல் குறைந்து வருகிறது. கடந்த வாரம் 50 ஆயிரமாக பதிவான கொரோனா தொற்று, நேற்றைய நிலவரப்படி (பிப்.,15) 27 ஆயிரமாக குறைந்துள்ளது. தொற்று உறுதியாகும் விகிதமும் 3.56 சதவீதமாக குறைந்தது.

இந்த சூழ்நிலையில், மாநில அரசுகள் விதித்துள்ள கூடுதல் கட்டுப்பாடுகள் மக்களின் நடமாட்டம் மற்றும் பொருளாதார நடவடிக்கைகளை பாதிக்கக்கூடாது. அதேநேரத்தில் தொற்று உறுதியாகும் விகிதத்தை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் தொடர்ந்து கண்காணிப்பதுடன், சோதனை, தொற்று உறுதியானவர்களை கண்டுபிடித்தல், சிகிச்சை, தடுப்பூசி மற்றும் பரவலை கட்டுப்படுத்துதல் ஆகிய நடவடிக்கைகளை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் அரியானாவில் அனைத்து கொரோனா கட்டுப்பாடுகளும் நீக்கம் செய்யப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இதன்படி அரியானா மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் (HSDMA) இன்று அதன் திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களில், முன்பு வெளியிடப்பட்ட அனைத்து கட்டுப்பாடுகளையும் நீக்க உத்தரவிட்டுள்ளது. இருப்பினும், சமூக விலகல் உட்பட கொரோனா பொருத்தமான நடத்தை விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்றுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com