2018 இல் அனைத்து வட-கிழக்கும் பாஜகவுடனிருக்கும் - அமித் ஷா

வருகின்ற மூன்று வட கிழக்கு மாநிலத் தேர்தல்களில் வெற்றி பெற்று அப்பிரதேசம் முழுவதையும் பாஜகவும், அதன் கூட்டணிகட்சிகளும் ஆளும் என்றா பாஜகவின் தலைவர் அமித் ஷா.
2018 இல் அனைத்து வட-கிழக்கும் பாஜகவுடனிருக்கும் - அமித் ஷா
Published on

புதுடெல்லி

நேடா எனப்படும் வடகிழக்கு மாநில ஜனநாயக கூட்டணியின் தேர்தல் உத்திகள் குறித்தான கூட்டத்தில் கலந்து கொண்ட அமித் ஷா தற்போது ஐந்து மாநிலங்களில் பாஜக கூட்டணி ஆட்சி செய்கிறது. வரும்காலத்தில் அனைத்து எட்டு மாநிலங்களிலும் ஆட்சி செய்வோம் என்றார் அமித் ஷா. ஆறுகட்சிகள் இப்போது கூட்டணியிலுள்ளன.

அசாம், மணிப்பூர் மற்றும் அருணாச்சல பிரதேசம் ஆகியவற்றில் பாஜகவும், நாகாலாந்து மற்றும் சிக்கிம் ஆகியவற்றில் அதன் கூட்டணி கட்சியும் பதவியிலுள்ளன.

அடுத்ததாக திரிபுரா, மேகாலயா மற்றும் மிசோரம் ஆகியவற்றில் தேர்தல் வரவுள்ளது. மோடி அதிக முக்கியத்துவம் கொடுக்கும் இப்பிரதேசத்தில் அனைத்து மாநிலங்களையும் தன் ஆளுகைக்குள் கொண்டு வர பாஜக முயற்சிக்கிறது. கடந்த மூன்றாண்டுகளில் மோடி அரசு இப்பிரதேசத்தில் மேம்பாட்டினை கொண்டு வந்துள்ளது. காங்கிரஸ் 65 ஆண்டுகளில் செய்ததை விட அதிகம் என்றார் அமித் ஷா.

ஆனால் வேலை முடியவில்லை இப்போதும் தொடர்கிறது என்றும் கூறினார் அவர். இப்படி ஒரே கூட்டணி ஆட்சி செய்வதால் தேசிய விவகாரங்களில் வட கிழக்கு மாநிலங்களின் பங்களிப்பு அதிகரிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார் அமித் ஷா.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com