புதுச்சேரியில் அனைத்து தாலுகா அலுவலகங்களும் சனிக்கிழமை செயல்படும் என அறிவிப்பு

பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்களைத் தவிர்க்கும் வகையில் இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.
புதுச்சேரியில் அனைத்து தாலுகா அலுவலகங்களும் சனிக்கிழமை செயல்படும் என அறிவிப்பு
Published on

புதுச்சேரி,

புதுச்சேரி மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

2025-26 கல்வியாண்டிற்கான பள்ளி மற்றும் கல்லூரி சேர்க்கை பருவத்தை முன்னிட்டு, குடியிருப்பு, வருமானம் மற்றும் சாதி சான்றிதழ்களுக்கு விண்ணப்பங்கள் பெருமளவில் பெறப்பட்டு வருகின்றன. இதனால் மாணவர்களும், அவர்களது பெற்றோர்களும் தாலுகா அலுவலகங்களில் சான்றிதழ்கள் பெறும் போது சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.

இந்த நிலையில், மாணவர்களின் விண்ணப்பங்கள் சரியான நேரத்தில் பரிசீலிக்கப்பட்டு, தேவையான சான்றிதழ்கள் வழங்கப்படுவதை உறுதி செய்ய, புதுச்சேரி மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகா அலுவலகங்களும் மாணவர்களுக்காக மட்டும் (24.05.2025), (31.05.2025) மற்றும் (07.06.2025) ஆகிய சனிக்கிழமைகளில் செயல்படும்.

மேலே குறிப்பிட்டுள்ள நாட்களில் வட்டாட்சியர் / தாலுகா அலுவலகங்களில் விண்ணப்பதாரர்களுக்கான இருக்கை, குடிநீர் போன்ற தேவையான ஏற்பாடுகள் செய்ய அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மாணவர்களின் நலனுக்காகவும், கடைசி நேரத்தில் பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்களைத் தவிர்க்கும் வகையில் இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. எனவே, மாணவர்களும் அவர்களது பெற்றோர்களும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com