நாட்டு மக்கள் அனைவரும் பாதுகாப்புடனும், மகிழ்ச்சியுடனும் இருக்க வேண்டும்; பிரதமர் மோடி உரை

நாட்டு மக்கள் அனைவரும் பாதுகாப்புடனும், மகிழ்ச்சியுடனும் இருக்க வேண்டி கொள்கிறேன் என பிரதமர் மோடி உரையில் கூறியுள்ளார்.
நாட்டு மக்கள் அனைவரும் பாதுகாப்புடனும், மகிழ்ச்சியுடனும் இருக்க வேண்டும்; பிரதமர் மோடி உரை
Published on

புதுடெல்லி,

பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை 6 மணியளவில் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அவர் பேசும்பொழுது, இந்தியாவில் கொரோனா நோயாளிகளுக்கு வசதியாக 90 லட்சம் படுக்கைகள் உள்ளன. 12 ஆயிரம் கொரோனா தனிமைப்படுத்துதல் மையங்கள் உள்ளன. ஏறக்குறைய 2 ஆயிரம் கொரோனா பரிசோதனை ஆய்வகங்களும் உள்ளன.

கொரோனா பரிசோதனை எண்ணிக்கையானது விரைவில் 10 கோடியை கடந்து செல்லும். கொரோனா வைரசுக்கு எதிரான நம்முடைய போரில் பரிசோதனை எண்ணிக்கையை அதிகரித்து இருப்பது நமது பலம் ஆகும்.

கொரோனா வைரசுக்கான தடுப்பு மருந்து தயாரிப்பில் அனைத்து நாடுகளும் போர்க்கால முறையில் செயலாற்றி வருகின்றன. கொரோனா தடுப்பு மருந்து உற்பத்தி செய்யப்பட்டு விட்டால், அதனை ஒவ்வொரு இந்தியனுக்கும் கிடைக்க செய்வதற்கான பணியில் அரசு தயாராகி வருகிறது.

உங்கள் அனைவருக்காகவும், நான் வேண்டி கொள்கிறேன். நீங்கள் அனைவரும் பாதுகாப்புடனும் உங்களது குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாகவும் இருப்பதனை காண நான் விரும்புகிறேன். பண்டிகைகள் உங்களது வாழ்வில் மகிழ்ச்சியை கொண்டு வருவதனை காண நான் ஆவலாக உள்ளேன் என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com