இந்திய விமானங்களில் செல்போன், இணையவழி சேவையை பயன்படுத்த அனுமதி

இந்திய விமானங்களில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணத்தின்போது செல்போன் மற்றும் இணைய வழி சேவைகளை பயணிகள் பயன்படுத்துவதற்கு தடை உள்ளது.
இந்திய விமானங்களில் செல்போன், இணையவழி சேவையை பயன்படுத்த அனுமதி
Published on

புதுடெல்லி,

விமான பயணிகள் தரப்பில் இதை நீக்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.

இந்த கோரிக்கையை பரிசீலித்த தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) இந்திய விமானங்களில் செல்போன் மற்றும் இணைய வழி சேவையை பயன்படுத்த இந்திய தொலைத் தொடர்பு ஆணையத்துக்கு பரிந்துரை செய்தது. இதையடுத்து தொலைத் தொடர்பு ஆணையம் தனது துறை உயர் அதிகாரிகளிடம் நேற்று ஆலோசனை நடத்தியது. அப்போது டிராய் செய்த பரிந்துரைக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.

இதையடுத்து சில நிபந்தனைகளுடன் இந்தியாவின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானங்களில் பயணிகள் செல்போன் மற்றும் இணைய வழி சேவையை பயன்படுத்த அனுமதிக்க முடிவு செய்யப்பட்டது. இந்த அனுமதி இன்னும் 3 அல்லது 4 மாதங்களில் நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதேபோல் தொலைத் தொடர்புத்துறை குறித்து நுகர்வோர் கூறும் புகார்களை விசாரிக்க முறை மன்ற நடுவரை (ஆம்பட்ஸ்மேன்) நியமிக்கவும் முடிவு செய்யப்பட்டு இருப்பதாக தொலைத் தொடர்பு செயலாளர் அருணா சுந்தரராஜன் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com