புற்றுநோய் சிகிச்சைக்கான மருந்துகளின் சில்லறை விலை 90 சதவீதம் குறைப்பு

புற்றுநோய் சிகிச்சைக்கான மருந்துகளின் சில்லறை விலை 90 சதவீதம் குறைக்கப்பட்டு உள்ளது.
புற்றுநோய் சிகிச்சைக்கான மருந்துகளின் சில்லறை விலை 90 சதவீதம் குறைப்பு
Published on

புதுடெல்லி

புற்றுநோய் சிகிச்சைக்கான மருந்துகளின் சில்லறை விலையை 87 சத்வீதம் வரை தேசிய மருந்துகள் விலை நிர்ணய ஆணையம் குறைத்துள்ளது.

புற்றுநோயாளிகள் மற்றும் அவர்கள் குடுப்பத்தினர் மலிவான விலையில் மருந்துகள் வாங்கும் விதத்தில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நுரையீரல் புற்றுநோய்க்கு கிமோதெரபி சிகிச்சைக்கு பயன்படும் இன்ஜெக்சன் (500 mg) மருந்து விலை 22,000 ரூபாயில் இருந்து 2,800 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. அதே பிரிவில் (100 mg) விலை 7,700 ரூபாயில் இருந்து 800 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. விலை குறைக்கப்பட்ட 9 மருந்துகளும் பல்வேறு புற்றுநோய் சிகிச்சைக்கு பயன்படுபவைகளாகும்.

கடந்த பிப்ரவரி மாதம் புற்றுநோய்க்கான 42 மருந்துகள் விலை 3 சதவீதம் வரை குறைக்கப்பட்ட நிலையில், நடப்பு ஆண்டில் தற்போது 2-வது முறையாக விலை குறைக்கப்பட்டுள்ளது. விலை குறைப்பை தொடர்ந்து மருந்து உற்பத்தி அளவை குறைக்கக் கூடாது என்று தயாரிப்பு நிறுவனங்களுக்கு சுகாதாரத் துறை அறிவுறுத்தி உள்ளது. இந்த விலை குறைப்பால் இந்தியாவில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 22 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் பயன்பெறுவார்கள். மருந்துக்காக அவர்கள் செலவழிக்கும் தொகையும் சுமார் 800 கோடி ரூபாய் வரை குறையும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com